மனித குலத்தின் பொது எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் - ஷிச்சின் பிங்

வாணி 2020-07-29 11:52:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 5 ஆவது செயற்குழுவின் ஆண்டுக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் காணொலி வழி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், கரோனா பாதிப்பைச் சமாளிப்பதில் உலக மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் ஒத்துழைப்பு மூலம் மனித குலத்தின் பொது எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். ஷிச்சின்பிங்கின் இக்கருத்தைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் உயர்வாக மதிப்பிட்டுள்ளனர்.

பொருளாதாரத்தின் உலகமயமாக்கப்போக்கில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரு தரப்பு வாதம், பாதுகாப்பு வாதம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தாமல், ஒருங்கிணைப்புத் தன்மை வாய்ந்த உலக மேலாண்மை, பயனுள்ள பல தரப்பு அமைப்புமுறை, ஆக்கப்பூர்வமான பிரதேச ஒத்துழைப்பு ஆகியனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனா எப்போதும் பல தரப்பு வாதத்தைக் கடைப்பிடித்து உலக நாடுகளுடன் சேர்ந்து கூட்டு வெற்றி பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றது. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும் பல தரப்பு வாதத்தை ஆதரிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிலையில், சர்வதேச சமூகம் சவால்களைச் சமாளித்து, கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதில் இந்நிறுவனம் மேலதிக பங்கு ஆற்றுவதற்கு சீனா ஆதரவளித்து, ஒரு பெரிய நாடு ஏற்க வேண்டிய பொறுப்பையும் துணிவையும் சீனா வெளிப்படுத்தி வருகின்றது.

தற்போது வரை உலகின் 6 கண்டங்களைச் சேர்ந்த 103 நாடுகள் அல்லது பிரதேசங்கள் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியில் சேர்ந்துள்ளன. இப்பின்னணியில், பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது என்பது சீனாவின் கருத்தாக மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தின் பொதுக் கருத்தாகவும் இருக்கின்றது என்பதை நடைமுறை உண்மைகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்