ஹாங்காங்கின் சர்வதேச நிதி மைய தகுநிலைக்கு உத்தரவாதம்

வாணி 2020-07-30 12:54:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக ஐயப்படத்தக்க 4 பேரை கைது செய்ததாக ஹாங்காங் காவற்துறை 29ஆம் நாள் தெரிவித்துள்ளது. இவர்கள் உருவாக்கிய அமைப்பு ஹாங்காங்கை தனி ஒரு நாடாக உருவாக்குவதற்காக எவ்வித அடிப்படையுமின்றி போராட வேண்டும் என்று இணையம் மூலம் வெளிப்படையாக கருத்தைப் பரப்பியது என்று தெரிய வந்துள்ளது.

காவற்துறை அதே நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் ஹாங்காங்கில் பதிவு செய்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 32,345 ஆகும். இது, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 27.9 விழுக்காடு அதிகம். இவற்றில் அடிதடி, பொருட்களைச் சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீ வைத்து நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் கடந்த ஆண்டை விட 13.5 விழுக்காடு அதிகரித்துள்ளன. குறிப்பாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளம் வயதினர்களின் எண்ணிக்கை 2306 ஆகும். இது கடந்த ஆண்டை விட 86.9 விழுக்காடு அதிகம்.

கரோனா தொற்றின் பாதிப்புடன், இத்தகைய வன்செயல்கள் சர்வதேச நிதி மையம் என்ற ஹாங்காங்கின் தகுநிலைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இந்நிலையில், ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் நடைமுறையாக்கம், ஹாங்காங்கில் சமூக ஒழுங்கு மற்றும் அமைதியின் மீட்புக்குத் துணை புரியும் என்று ஹாங்காங் நிதி மேலாண்மை பணியகத்தின் முன்னாள் இயக்குநர் ரேன் ச்சிகாங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் நிகழ்ந்து வரும் வன்செயல்கள் ஹாங்காங் நகரவாசிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த தவறினால், நிதித் துறை திறமைசாலிகள் ஹாங்காங்கிலிருந்து வெளியே செல்லுவர். இதனால், சர்வதேச நிதி மையம் என்ற ஹாங்காங்கின் தகுநிலை பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இச்சூழலில் இயற்றப்பட்டுள்ள ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங்கின் இயல்பான சமூக ஒழுங்கிற்குச் சிறந்த அடிப்படையை இடும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் கையிருப்பு நிதி சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கோடி ஹாங்காங் டாலராகும். கரோனா தொற்று பாதிப்பைச் சமாளிக்க ஹாங்காங்கிற்கு போதிய ஆற்றல் உண்டு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்