சிறப்புமிக்கஷென்சென் - ஜெர்மன் வணிகர்

இலக்கியா 2020-08-27 17:17:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த 40 ஆண்டுகளில் ஷென்சென், மீன்பிடி தொழில் சார்ந்த சிறிய ஊர் என்பதில் இருந்து நவீன மாநகராக வளர்ந்திருக்கின்றது. புதுமையாக்கத்தில் கவனம் குவிக்கும் பண்பாட்டுச்சூழல், ஷென்சென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியை அளித்து, பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் ஜுலை 30ஆம் நாள் ஜெர்மனி வணிக மற்றும் தொழில் சங்கத்தின் புதுமையாக்க மையம் ஒன்று ஷென்செனில் திறக்கப்பட்டது. ஜெர்மனியின் வெளிநாட்டு வணிக சங்கங்களின் கூட்டமைப்பு உலகளவில் நிறுவிய முதல் புதுமையாக்க மையம் இதுவாகும். குவாங்சோவிலுள்ள ஜெர்மனி வணிக மற்றும் தொழில் சங்கத்தின் அலுவலகத்தின் முதன்மை பிரதிநிதி மா மிங்போ குறித்து பேசுகையில், ஷென்சென்னில் வன்பொருட்களை புதுமையாக்கம் செய்வதற்கான தனிச்சிறப்பான சூழல் உள்ளது. இங்கு புதிய உயர் தொழில் நுட்பங்களையும் உயர் தொழில் நுட்பத் திறமைசாலிகளையும் தேடுவது எளிமையாக இருக்கும். எனவே ஷென்சென், புதுமையாக்கத்துக்கான உள்ளார்ந்த ஆற்றல் மிக்க இடமாகும் என்று தெரிவித்தார்.

அதோடு, பொருளாதார உறவைத் துண்டிப்பது, வர்த்தகப் பாதுகாப்புவாதம் முதலியவை உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டாது என குறிப்பிட்ட அவர், இது குறித்து பன்னாட்டு சமூகம் உடன்பாட்டை உருவாக்கி, அனைவரும் நலன் பெறும் நோக்கில் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்