முழு மூச்சுடன் முன்னேறும் சீன மக்கள்

வாணி 2020-09-08 21:23:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் செவ்வாய்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பாராட்டு மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நோய் பரவல் தடுப்பில் சீனா பெற்றுள்ள அனுபவங்களைத் தொகுத்து, உலகளவில் இப்பணி மேற்கொள்வதற்கு பயன் தரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அவரது உரையில் மக்களுக்கே முதன்மை என்ற சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டை விவரமாக விவரிக்கப்பட்டது.

வூஹான் நகரில் நோய் பரவல் மிகவும் கடுமையாக இருந்த போது, பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் அணி திரண்டு நோய் அபாய நிலையில் இருந்த இந்நகருக்குச சென்றனர். அதேவேளையில் நாடளவில் 40 இலட்சத்துக்கும் அதிகமான சமூக சேவகர்கள் பகலிலும் இரவிலும் சேவை புரிந்தனர். சொந்த நாடு மற்றும் உலகின் பாதுகாப்புக்கு ஒவ்வொரு சீன மக்களும் வலுவான பொறுப்புணர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி டாக்டர் எல்வோட் தெரிவித்தார். நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது. மேலும் இத்துறையில் வெற்றி பெற்ற சீனா உடனடியாக இதர நாடுகளுக்கு உதவிப் பொருட்களை வழங்கியது. இது மனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்கும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அர்ஜென்டீனாவின் சீன ஆய்வு மையத்தின் தலைவர் இக்னாசியோ விலாகுரான் கூறினார்.

மேலும் அழகான வாழ்க்கைக்காக முழு மூச்சுடன் முன்னேறும் சீன மக்களை யாரும் தடுத்துவிட முடியாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்