ஐ.நா.வின் 75ஆவது ஆண்டு நிறைவு:சீனாவின் நிலைப்பாட்டு ஆவணம் வெளியீடு

சிவகாமி 2020-09-10 19:22:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா.வின் 75ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு, நிலைப்பாட்டு ஆவணம் ஒன்றைச் சீன வெளியுறவு அமைச்சகம் 10ஆம் நாள் வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் பங்கு, சர்வதேச நிலைமை, தொடரவல்ல வளர்ச்சி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் ஒத்துழைப்பு முதலிய பிரச்சினைகள் குறித்து சீனாவின் நிலைப்பாடும் கருத்துக்களும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேசச் சமூகம்,ஐ.நா. நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதை முக்கிய வாய்ப்பாகக் கொண்டு, பாசிசவாத எதிர்ப்புப் போரில் கிடைத்த வெற்றியைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும். ஒருதரப்புவாதம், மேலாதிக்கவாதம், வல்லரசு அரசியல் ஆகியவற்றைப் புறக்கணிக்க வேண்டும். பலதரப்புவாதத்தை உறுதியாக ஆதரித்து, ஐ.நா. சாசனத்தின் கோட்பாட்டை உறுதியாகப் பாதுகாத்து, ஐ.நா.வை மையமான சர்வதேச அமைப்பு முறையையும் சர்வதேசச் சட்டத்தை அடிப்படையான சர்வதேச ஒழுங்கையும் பேணிக்காக்க வேண்டும். உலக நாடுகளுடன் இணைந்து மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகின்றது என்றும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்