திறப்புப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் சீனா

இலக்கியா 2020-09-10 19:34:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இப்பொருட்காட்சி மூலம், பொருளாதார உலகமயமாக்கத்தைத் தூண்டுவது, பலதரப்புவாதத்துக்கு ஆதரவு அளிப்பது முதலியவை தொடர்பான நம்பிக்கையை சீனா உலகத்துக்குக் காட்டியுள்ளது.

இப்பொருட்காட்சி குறித்து டெலொட்டி தொழில் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கான தலைமை திட்ட இயக்குநர் கூறுகையில், தொடர்ந்து சந்தையைத் திறப்பது, வணிகச் சூழலை மேம்படுத்துவது, சேவைத் துறையை விரிவாக்குவது ஆகியவற்றில் சீனாவின் மன உறுதியை நான் உணர்ந்து கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மேலும் திறப்பான சீனச் சேவை சந்தை என்பது, பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் புதிய சக்தியாகவும், வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கான புதிய சக்தியாகவும் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்