சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் புத்தாக்கப் பாதை

சிவகாமி 2020-09-14 10:36:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் 11ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்ற அறிவியலாளர் கலந்துரையாடல் கூட்டத்துக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் தலைமை தாங்கி, உரை நிகழ்த்தினார். 14ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் கோரியுள்ளார்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவச் சிகிச்சை முறையிலும், நோய் தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் முக்கிய துறைகளில் அறிவியல் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நோய் தடுப்பில் அவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

எமது பொருளாதாரச் சமூக வளர்ச்சியிலும் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிலும் முன்பை விட அறிவியல் தொழில் நுட்பமும் புத்தாக்கமும் மேலும் தேவைப்படுகின்றன.

இதைத் தவிர, கடந்த சில ஆண்டுகளில் சீன அறிவியல் தொழில் நுட்பமும் புத்தாக்கம், முன்னேறிய ஆய்வு துறைகளிலும் மக்கள் வாழ்க்கையிலும் வளர்ந்து வருகின்றது. எடுத்துக்காடாக, சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட, தியான் வென்-1 ஆய்வுக் கலம், 10 கோடி கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. காவ்ஃபென்-9 05 செயற்கைக் கோள் ஆகஸ்ட் 23ஆம் நாள், திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

சீனாவில் 5ஜி தொழில் நுட்பத்தின் பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேலான 5ஜி அடிப்படை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 40 ஆயிரமாகும். இவ்வாண்டு இறுதி வரை, கைபேசிச் சேவைக்கான 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டக் கூடும். அடுத்த ஐந்தாண்டில், சீனாவில் குறைந்தது 1 கோடியே 14 இலட்சம் 5 ஜி அடிப்படை நிலையங்கள் கட்டியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாக, அறிவியல் தொழில் நுட்பம், முதன்மை உற்பத்தி ஆற்றலாகும். புத்தாக்கம், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியைத் தாண்டும். எதிர்காலத்தில், அறிவியல் தொழில் நுட்ப மற்றும் புத்தாக்கப் பாதையில் சீனா தொடர்ந்து நடைபோடும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்