சீனப் பொருளாதார வளர்ச்சி உலகின் மீட்சிக்கு உந்து சக்தி

இலக்கியா 2020-10-03 17:33:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் சீனத் தேசிய விழா மற்றும் நிலா விழா விடுமுறையில் நோய் தடுப்புப் பணியில் முன்னேற்றங்களை அடைந்த சீன மக்கள் அதிக நுகர்வில் ஆவல் காட்டி வருகின்றனர். சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் முதல் நாளில் சீனாவில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 9.7 கோடி ஆகும். இது 2019ஆம் ஆண்டில் இதே காலத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையில் 73.8 விழுக்காடாகும். இதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு 7665 கோடி யுவான் வருமானம் கிடைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்ட செய்தி அறிக்கையில், 2ஆவது காலாண்டில் 20 நாடுகள் குழுவின் பெரும்பாலான உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் முன்கண்டிராத தாழ்வைச் சந்தித்தன. இந்நிலையில் சீனா, பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே ஒரு உறுப்பு நாடாகும் என்று குறிப்பிடப்பட்டது. உலக வங்கி செப்டம்பர் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம், 2 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி முறைமை, உள்நாட்டு வளர்ச்சி மட்டுமல்ல. மாறாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்குப் பொருந்தும் இரட்டைச் சுழற்சி முறைமை கொண்டதும் ஆகும். இதன் மூலம் சீனாவும் உலகப் பொருளாதாரமும் மேலும் நெருக்கமாக இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியைச் சேர்ந்த சீன விவகார நிபுணர் ஃப்ரென்க் சீரேன் அண்மையில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், உலகின் மிகப் பெரிய உற்பத்தி தளமாகவும் விற்பனைச் சந்தையாகவும் திகழும் சீனா, உலகின் விநியோகச் சங்கிலியில் வகிக்கும் பங்கு எதிர்வரும் சில ஆண்டுகளில் உயரக் கூடும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்