சீனாவில் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள்

​வாணி 2020-10-05 17:06:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குவாண்டம் செயற்கைக்கோள், சந்திர மண்டல ஆய்வுக் கலன், நுண்மதி உயர்வேகத் தொடர்வண்டி, உலகில் மிகப் பெரிய ஒற்றை-துளை வானொலியலை தொலைநோக்கி, உலகளவில் சேவை புரியக் கூடிய பெய்தாவ் புவியிடங்காட்டி அமைப்பு முதலியவை கடந்த 5 ஆண்டுகளில் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனா பெற்றுள்ள முன்னேற்றங்களாகும். இது பற்றி பிரேசிலைச் சேர்ந்த தொழில் புத்தாக்கத் துறை நிபுணர் ஃபெர்னான்டஸ் கூறுகையில், அறிவியல்த் துறை முன்னணியில் சீனா உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்று வருகிறது. நெடு நோக்கு பார்வையுடைய தேசிய வளர்ச்சித் திட்டம் இதற்கான காரணமாகும் என்று தெரிவித்தார்.

தவிரவும், அறிவியல் தொழில் நுட்ப ஆய்வில் சீனா தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன் புத்தாக்கத்துக்குத் தகுந்த சூழ்நிலையையும் மேம்படுத்தி வருகின்றது. 2019ஆம் ஆண்டு ஆய்வுத் துறையில் சீனாவின் நிதி ஒதுக்கீடு 2 இலட்சத்து 21 ஆயிரம் கோடி யுனாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி செலவை விட அதிகமாகும். கண்டுபிடிப்புக் காப்புரிமை எண்ணிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக சீனா தொடர்ச்சியாக உலகளவில் முதலிடத்தைப் பெற்று வருகின்றது.

பன்னாடுகளுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றுவதிலும் சீனா ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகின்றது. ஒரு மண்டல் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா பெய்தாவ் புவியிடங்காட்டி அமைப்பின் தொழில் நுட்பங்களையும் பயன்பாட்டையும் பகிர்ந்து கொண்டு வருகின்றது. கரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வில் முன்னணியிலுள்ள சீனா ஆய்வு வெற்றி பெற்ற பிறகு இத்தடுப்பூசி உலக பொது உற்பத்திப் பொருளாக வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகப் பல முறை தெரிவித்துள்ளது.

அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் மூலம் உலகில் மென்மேலும் அதிக மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று சீனா நம்புகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்