​அமெரிக்காவின் திபெத் விவகார ஒருங்கிணைப்பாளர் நியமாத்துக்கு சீனா எதிர்ப்பு

தேன்மொழி 2020-10-15 21:06:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசு திபெத் விவகாரத்துக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ட்செள லீ ஜயன் அக்டோபர் 15-ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல், முற்றிலும் அரசியல் தந்திரமானது. சீன உள்விவகாரத்தில் தலையிடுவது, திபெத்தின் நிதானமான வளர்ச்சியைச் சீர்குலைப்பது ஆகியவை, அமெரிக்க அரசின் இலக்காகும் என்று தெரிவித்தார். அதோடு, இதனை சீனா எப்போதும் உறுதியாக எதிர்த்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்