சீனாவின் வறுமை ஒழிப்புக்கு வெளிநாட்டுத் தூதர்கள் பாராட்டு

2020-10-17 16:55:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 7ஆவது தேசிய வறுமை நிவாரண தினம் மற்றும் ஐ.நாவின் 28ஆவது சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சீனாவுக்கான தூதர்கள், சிந்தனைக் கிடங்குகளின் அறிஞர்கள் என 400க்கும் அதிகமானோர், ஃபூஜியன் மாநிலத்தின் ஃபூசோ நகரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்பு துறை மற்றும் ஃபூஜியன் மாநிலக் கட்சி கமிட்டியுடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டனர். வறுமை ஒழிப்பு மற்றும் அரசியல் கட்சியின் கடமை என்ற இக்கருத்தரங்கில், வறுமை ஒழிப்பு மற்றும் மனிதகுலத்தின் தொடரவல்ல வளர்ச்சி, சீனாவின் வறுமை ஒழிப்பு மற்றும் சர்வதேச வறுமை நிவாரணம் உள்ளிட்ட கருப்பொருட்கள் குறித்து அவர்கள் விவாதம் நடத்தி, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள் பேட்டியளிக்கையில், வறுமையிலிருந்து சீனா வெற்றிகரமாக விலகும் மாதிரி, உலகின் இதர நாடுகளுக்கு கற்றுக் கொள்ளத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுடன் மேலும் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தனர்.

தவிரவும், இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அக்டோபர் 13ஆம் நாள் ட்சி சி கிராமத்தில் உள்ளூர் வறுமை ஒழிப்பு பற்றி அறிந்து கொள்ளும் விதம் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

இக்கிராமத்தில் நுழைந்ததும் அழகிய காட்சிகளால் அவர்கள் ஈர்க்கப்பட்டனர். பசுமையான மலை மற்றும் தெளிவான நதியால் சூழப்பட்ட ட்சி சி கிராமத்தில் குடியிருப்பு வீடுகள் வரிசை வரிசையாக காணப்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, உள்ளூர் நிலைமைக்கிணங்க வறுமை ஒழிப்பு, குடிபெயர்வு மூலம் வறுமை ஒழிப்பு, சுற்றுலா மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி மூலம் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடைமுறைகளில், சுற்றுலா, வேளாண்மை, பண்பாடு, இயற்கைச் சூழல் ஆகியவற்றின் மூலம் இக்கிராமம் வறுமையிலிருந்து விலகியது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்