7வது பட்டுப்பாதை சர்வதேசத் திரைப்பட விழா நிறைவு

பூங்கோதை 2020-10-17 17:06:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

7வது பட்டுப்பாதை சர்வதேசத் திரைப்பட விழா அக்டோபர் 16ஆம் நாளிரவு சீனாவின் சிஅன் நகரில் நிறைவு பெற்றது. 116 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000க்கும் மேலான திரைப்படங்கள் இவ்விழாவில் திரியிடப்பட்டன.

ஷான்சி மாநிலத்தின் துணைத் தலைவர் ச்செங் ஃபூபோ கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேரந்த திரைப்படப் பணியாளர்களுடன் பயன்தரும் ஒத்துழைப்பு மேற்கொண்டு, மேலும் உயர் நிலையிலான தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை நிறைவேற்ற விரும்புகின்றோம் என்றார்.

மேலும், இவ்விழாவின் போது 36 ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டன. சீனா மற்றும் வெளிநாடுகளின் 500க்கும் மேலான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்