ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் ஷென்ட்சென் நிதி ஒதுக்கீடு

வான்மதி 2020-10-18 16:45:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறைக்கு ஷென்ட்சென் 13280 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்தது. இத்தொகை அந்நகரின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.9 விழுக்காடு வகிக்கிறது. மேலும் சர்வதேச கண்டுபிடிப்பு காப்புரிமைக்கான அதன் விண்ணப்பங்கள் எண்ணிக்கை 17500 ஆகும். இது முழு நாட்டின் விண்ணப்பங்களில் 30.6 விழுக்காடு வகித்து, தொடர்ந்து 16 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளது. சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 18ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் துணை அமைச்சர் சு நான்பிங் இக்கூட்டத்தில் கூறுகையில், நீண்டகாலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் அரசவையின் சரியான தலைமையில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து செயல்பட்டு, ஷென்ட்செனின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கப் பணிக்கு ஆதரவளித்து வருகிறது. பெரும் சாதனைகளைப் பெற்றுள்ள ஷென்ட்செனின் புத்தாக்கப் பணி நாட்டின் முன்நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்