பிரிக்ஸ் நாட்டு எதிர்கால ஒத்துழைப்பு பற்றி புதினின் கட்டுரை

ஜெயா 2017-09-01 10:06:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாட்டு எதிர்கால ஒத்துழைப்பு பற்றி புதினின் கட்டுரை

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சியாமென் சந்திப்பு துவங்கும் முன், செப்டம்பர் முதல் நாள், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, பிரிக்ஸ் நாட்டு எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்பு குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் நாடு--நெடுநோக்குக் கூட்டாளியுறவை துவக்கும் புதிய பார்வை என்ற தலைப்பிலான கட்டுரையில் புதின் கூறுகையில், இவ்வாண்டு பிரிக்ஸ் நாட்டின் நடப்பு தலைவர் நாடாக, சீனாவின் உயர்வான பயனுள்ள பணி, அரசியல், பொருளாதாரம், மானிடவியல் முதலிய முக்கிய ஒத்துழைப்புத் துறைகளில் எங்களுக்கு முக்கியமான முன்னேற்றங்களை விளைவித்துள்ளது. தவிர, உலகில் பிரிக்ஸ் நாடுகளின் தகுநிலை தெளிவாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

மேலும் நெருக்கமான தூதாண்மை ஒருங்கிணைப்புக் கொள்கையை பிரிக்ஸ் நாடுகள் செயல்படுத்த வேண்டும். உலக தகவல் பாதுகாப்புத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும். அரசியல், பொருளாதாரம், மானிடவியல் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாட்டு கூட்டாளியுறவை ஆழமாக்க வேண்டும் என்று ரஷியா வேண்டுகோள் விடுப்பதாக புதின் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்