வட கொரியாவின் மீதான தடை நடவடிக்கை

சரஸ்வதி 2017-09-12 15:50:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா பாதுகாப்பவை 11ஆம் நாள் தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டது. இது, வட கொரியாவின் மீது புதிய தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளும். இதன் மூலம், கொரியத் தீபகற்ப மற்றும் வட கிழக்காசிய அமைதி மற்றும் நிதானத்தை தொடர்ந்து பேணிக்காத்து, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறை ஆகியவை மூலம், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வட கொரியாவுக்கான எண்ணெய் வினியோகக் குறைப்பு, வட கொரியாவின் நெசவுப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடுத்தல், வெளிநாடுகளில் உள்ள வட கொரிய நாட்டவர்கள் வட கொரியாவுக்கு பணம் அனுப்புவதற்குத் தடை விதித்தல் முதலியவை இத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்நிலையில் இத்தீர்மானம் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர உறுப்பினர் லியூ ஜியே யீ பேசுகையில், கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையில் சீனா ஊன்றி நின்று வருகிறது. கொரியத் தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிதானத்தை உறுதியாகப் பேணிக்காத்து, பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதை சீனா ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்