கலிபோர்னியாவில் கடும் காட்டுத் தீ 11பேர் சாவு

நிலானி 2017-10-11 09:49:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கலிபோர்னியாவில் கடும் காட்டுத் தீ 11பேர் சாவு

அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 8ஆம் நாள் முதல் தற்போது வரை நீடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை, இத்தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேலானோர் காணாமல் போயினர் என்ற தகவலை உள்ளூர் அதிகாரி ஒருவர் உறுதிப்டுத்தினார்.

தீ பரவுவதால், கலிபோர்னியாவின் 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது. மின்சார துண்டிப்பு காரணமாக 10,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். கூட்டாட்சி அரசின் உதவியைப பெறும் வகையில், கலிபோர்னிய ஆளுநர் 9ஆம் நாள் அரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினார்.

கலிபோர்னியாவில் கடும் காட்டுத் தீ 11பேர் சாவு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்