வட கிழக்காசிய பாதுகாப்புக்கான சீன-ரஷிய 8வது கலந்தாய்வு

பூங்கோதை 2017-10-11 18:26:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கிழக்காசிய பாதுகாப்புக்கான சீன-ரஷிய 8வது கலந்தாய்வு

வட கிழக்காசிய பாதுகாப்புக்கான சீன-ரஷிய 8வது கலந்தாய்வு 2017ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் மாஸ்கோவில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சரின் துணையாளர் கூங் சுவான்யூவ், ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் இகோர் மோர்கோவ் அகியோர் இக்கலந்தாய்வுக்குத் தலைமைத் தாங்கினர். இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கெடுத்தனர்.

தற்போதைய கொரிய தீபகற்ப நிலைமையில் இரு தரப்பும் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறன. தொடர்புடைய பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் இருந்து, இந்நிலைமையைத் தீவிரமாக்கும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது. கொரிய தீபகற்பம் மற்றும் பிரதேசத்தின் அமைதியையும் நிலைப்புத் தன்மையையும் பேணிக்காக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

மேலும், தென் கொரியாவில் சாட் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதியை அமெரிக்கா மற்றும் தென் கொரியா பரவல் செய்வது குறித்து, இரு தரப்பும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன், நெருங்கிய தொடர்பு மேற்கொண்டு, பிரதேச நிலைமையைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்