வட அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கையை நிறுத்துவோம்: டிரம்ப்

வான்மதி 2017-10-12 14:45:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கனடா மற்றும் மெக்சிகோவுடன் அமெரிக்கா உருவாக்கிய வட அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கையை நிறுத்துவோம் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 11ஆம் நாள் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ஆனால், இவ்விரு நாடுகளுடன் தனித்தனியாக இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்ப், கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ருடாவுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வட அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கையைப் புதுமையாக்கும் பேச்சுவார்த்தை மிகவும் கடினமானது. மூன்று நாடுகள் ஒத்த கருத்துக்கு வர முடியாது என்றால் இவ்வுடன்படிக்கை நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார்.

ஆனால், அமெரிக்காவிலுள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் ட்ருடாவ் உரை நிகழ்த்துகையில் மேற்கூறிய பேச்சுவார்த்தையை நிறைவேற்றுவதன் மீது நம்பிக்கை கொள்வதாகத் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்