அமெரிக்க கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ பாதிப்பு

வாணி 2017-10-13 18:28:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா நாட்டின் கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியிலுள்ள வனப் பிரதேசத்தில் தீப்பிழம்புகள் மேலும் பரவி வருகிறது. இதுவரை, இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது என்று உள்ளூர் காவற்துறை 12ஆம் நாளிரவு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால், பல செய்தித் தொடர்பு வசதிகள் இயங்கமுடியவில்லை, ஆகவே, காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்டவர்களில் இன்னும் சுமார் 400 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது மொத்தம் 9 மாவட்டங்களில் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. 8000க்கும் அதிகமான தீயணைப்பு வீர்ர்களும், 70 ஹேலிகாப்டர்களும், 550 தீயணைப்பு வாகனங்களும் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 12ஆம் நாள் இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அன்று பிற்பகல் 3 மணி வரை, சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 103 விமான சேவை ரத்து செய்யப்பட்டன. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்