ஈரான் அணு ஆற்றல் அமைப்புத் தலைவரின் எச்சரிக்கை

2017-10-16 15:41:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் அணு ஆற்றல் பிரச்சனை தொடர்பான பன்முக உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டால், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் இணைப்பு உடன்படிக்கையைச் செயல்படுவதை ஈரான் நிறுத்தும். ஈரான் அணு ஆற்றல் அமைப்பின் தலைவர் அலி அக்பார் சலேஹி 15ஆம் நாள் உள்ளூர் செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அரசுத் தலைவரின் நிலைப்பாட்டை அவர் குறைகூறினார். தவிரவும், ஈரானின் இராணுவத் தளங்களைப் பரிசோதனை செய்யும் கோரிக்கையையும் அவர் மறுத்துவிட்டார். ஈரான் அணு ஆற்றல் பற்றிய பன்முக உடன்படிக்கையின் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அனைத்தையும் ஈரான் நிறைவேற்றியுள்ளது. ஆனால், இவ்வுடன்படிக்கையின் கட்டுக்கோப்பில் இடம்பெறாத கோரிக்கை எதையும் ஈரான் செயல்படுத்த மாட்டாது என்று சலேஹி கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்