ஐரோப்பிய ஒன்றியத்தின் 23 நாடுகளுக்கிடையில் தேசியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு

2017-11-14 10:39:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்தின் 23 நாடுகளின் வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் 13 ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் செயல் கூட்டத்தின் போது, உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். தேசியhd பாதுகாப்புத் துறைகளில் நிலையான கட்டமைப்புத் தன்மை ஒத்துழைப்பு உடன்படிக்கை இதுவாகும்.

இந்நிலையில் இது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியச் செயல் குழு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வொன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையில் தேசியப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். உடன்படிக்கையின்படி, தேசியப் பாதுகாப்பு ஆற்றல், தொடர்புடைய முதலீட்டுத் திட்டப்பணிகள், இராணுவ ஆற்றல் மேம்பாடு முதலிய துறைகளில், இந்த உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்