லாவோஸ் நாடாளுமன்றத் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

வான்மதி 2017-11-14 18:55:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லாவோஸ் நாடாளுமன்றத் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 14ஆம் நாள் வியன்டியன் தேசிய மாநாட்டு மையத்தில் லாவோஸ் நாடாளுமன்றத் தலைவர் பானி யதோடொவைச் சந்திதார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், லாவோஸுடன் உறவை வளர்ப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. லாவோஸுடன் இணைந்து, இருநாடுகளுக்கு நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொது சமூகத்தை உருவாக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார். இருதரப்புறவின் வளர்ச்சிக்கு லாவோஸ் நாடாளுமன்றம் ஆற்றியுள்ள பங்கினையும் அவர் பாராட்டினார். தவிரவும், சட்டப்பூர்வ ஆட்சிமுறையை சீனா முன்னேற்றும் அனுபவங்களையும் ஷிச்சின்பிங் பானியிடம் அறிமுகம் செய்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மேற்கொண்ட முதல் பயணத்தில் லாவோஸுக்கு வருகை தந்ததற்கு பானி யதோதொ வரவேற்பு தெரிவித்தார். சீனாவுடனான ஒத்துழைப்பு, லாவோஸ் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்