லாவோஸ் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

வான்மதி 2017-11-14 19:05:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லாவோஸ் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 14ஆம் நாள் வியன்டியன் தேசிய மாநாட்டு மையத்தில் லாவோஸ் தலைமை அமைச்சர் தொங்லௌன் சிசௌலித்தைச் சந்தித்தார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், லாவோஸுடன் உறவை வளர்ப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருதரப்பும் உயர் நிலையிலான தொடர்பை நிலைநிறுத்தி, இருநாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை இடைவிடாமல் வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொங்லௌன் கூறுகையில், தோழர் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன மக்கள், மாபெரும் நெடுநோக்கு இலக்கை நனவாக்கும் புதிய பயணத்தில் வெற்றி பெற முடியும் என நம்புவதாகத் தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து நடப்பு பயணத்தின் பயன்களைச் செயல்படுத்தி, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருநாடுகளுக்கு உறுதியான பொது சமூகத்தை உருவாக்க லாவோஸ் விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்