சீன-மியன்மர் பொருளாதார மண்டலம் எனும் முன்மொழிவு

சரஸ்வதி 2017-11-20 11:01:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மியான்மரில் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ நவம்பர் 19ஆம் நாள், அந்நாட்டின் நைபிடாவில் அரசியல் ஆலோசகரும் வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூகியுடன் சந்தித்துரையாடினார். சீன-மியன்மார் பொருளாதார மண்டலம் எனும் முன்மொழிவை சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ வழங்கினார். ரோஹிங்யா மாநிலப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து சீனத் தரப்பின் ஆலோசனையை வாங்யீ தெரிவித்தார்.


ஆங் சான் சூகியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, வாங்யீ செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவுக்கான சீனாவின் முக்கிய கூட்டாளியுறவாக மியன்மார் திகழ்கிறது என்று சீனா கருதுகிறது. இரு தரப்புகளின் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கும் வகையில், சீன-மியன்மார் பொருளாதார மண்டலம் எனும் முன்மொழிவை சீனா வழங்கியது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது


இரு தரப்புகளுக்கிடையில் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானம் குறித்து கூட்டாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் யூன்னான் மாநிலத்திலிருந்து தெற்கு பகுதியை நோக்கி, சீன-மியன்மார் எல்லை பிரதேசத்தின்  மூலம், மண்டலேவுக்குச் சென்று, இரண்டு திசைகளில் இம்மண்டலம் தொடரும். கிழக்குப் பகுதியில், மியான்மர் யாங்காங் புதிய நகரை நோக்கியும், மேற்கில் க்யாயுக்ப்யூ பொருளாதார மண்டலத்தை நோக்கியும் என்று அவர் தெரிவித்தார்.

அந்நாட்டின் நைபிடாவில் அரசியல் ஆலோசகரும் வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூகி இந்த முன்மொழிவைப் பாராட்டினார். அவர் கூறியதாவது


இரு நாடுகள் நன்றாக ஒத்துழைப்பது, மியான்மாரில் அமைதியையும் நிதானத்தையும் நனவாக்குவதற்குத் துணனை புரியும் மட்டும்மலாமல், மியான்மரின் வளர்ச்சியையும் விரைவுபடுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மியான்மரின் அமைதி முன்னேற்றப் போக்கிற்கு சீனாவின் ஆதரவை வாங்யீ மீண்டும் தெளிவுபடுத்தினார்.


ரோஹிங்யா மாநிலப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், வங்காளதேசத்துடன் ஆலோசனை நடத்தி, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளுக்கு, சர்வதேச சமூகமும் ஐ.நாவும் ஆதரவளித்து, உரிய, நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இத்தீர்வுக்கு, சீனா மூன்று ஆலோசனைகளை வழங்கியது. அதாவது போர் நிறுத்தம், மியான்மர் வங்காளத்தேச தொடர்புக்கு தொடர்புடைய தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு வறுமையிலிருந்து விலக இப்பிரதேசத்துக்கு உதவி ஆகியவற்றின் மூலம், தீர்வு காண வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்