அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரி குறைப்பு மசோதா

வான்மதி 2017-12-03 15:46:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சில நாட்கள் தொடர்ந்த விவாதத்துக்குப் பிறகு, குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் அமெரிக்காவின் செனெட் அவையில், 2ஆம் நாள் விடியற்காலை வரி குறைப்பு மசோதா 51 ஆதரவு மற்றும் 49 எதிர்ப்பு வாக்குகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. டிரம்ப் அரசு மற்றும் குடியரசு கட்சி கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவிலான வரி குறைப்பு திட்டத்தை நிறைவேற்றும் திசை நோக்கி மேலும் ஒரு காலடி எடுத்து வைத்துள்ளதை இது காட்டுகிறது.

செனெட் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கட்சித் தலைவர் மிச் மெக்கன்னெல் வாக்கெடுப்புக்குப் பின் கூறுகையில், அமெரிக்க பொருளாதாரத்தின் போட்டியாற்றலை உயர்த்துவது, வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பது, நடுத்தர வகுப்பினரின் சுமையைக் குறைப்பது ஆகியவற்றுக்கு இம்மசோதா நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார். ஆனால், இந்த மசோதா அமெரிக்காவின் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குறைகூறியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்