வட கொரியாவில் ஐ.நா அலுவலரின் பயணம்

2017-12-05 10:36:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரியாவில் ஐ.நா அலுவலரின் பயணம்


அரசியல் விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா துணை தலைமைச் செயலாளர் ஜேப்ரீ ஃபெல்ட்மன் டிசம்பர் 5 முதல் 8ஆம் நாள் வரை வட கொரியாவில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அரசு அலுவலர்களுடன் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்க உள்ளார் என்று ஐ.நா 4ஆம் நாள் தெரிவித்தது.

ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், வட கொரியப் பயணம் மேற்கொள்ளும் போது, ஜேப்ரீ ஃபெல்ட்மன் ஐ.நா பன்னாடுகள் குழு மற்றும் தூதாண்மை குழுக்களின் உறுப்பினர்களைச் சந்தித்து, ஐ.நாவின் தொடர்புடைய திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைப் பார்வையிடுவார் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்