அமெரிக்காவில் சூமா எனும் விண்கலன் ஏவப்பட்டது

2018-01-08 15:42:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுக்காக “சூமா”எனும் ரசியமான விண்கலன் ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது.இந்த விண்கலன், 7ஆம் நாள் இரவு 8 மணிக்கு ஃபல்கன் 9 ரக ஏவூர்தி மூலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, சூமா விண்கலத்தின் பயன்பாடு மற்றும் இலக்கு பற்றி தெரியவில்லை. பெயரைத் தவிர, அது தொடர்பான பிற தகவல்கள் ஏதுமில்லை. மேலும் எந்த அமெரிக்க அரசின் நிறுவனமும் இதற்கு உரிமையாளராக அறிவிக்கவில்லை.

திட்டப்படி சூமா விண்கலம், கடந்த நவம்பரில் ஏவப்பட இருந்தது. ஆனால், பல்வகை காரணங்களால், அதை ஏவும் திட்டம் பல முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்