தென் கொரியா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தை

மோகன் 2018-01-09 15:26:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென் கொரியா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தை

தென் கொரியா மற்றும் வட கொரியாவின் பிரதிநிதிகள் ஜனவரி 9ஆம் நாள் பாந்முன்ஜும் பிரதேசத்தில் உயர் நிலை பேச்சுவார்த்தை நடத்தினர். வட கொரியாவின் உயர் நிலை பிரதிநிதிக் குழுவினர் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி பிரதிநிதிக் குழுவினர் ஆகியோர் பிங்யூங்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வர் என்று இப்பேச்சுவார்த்தையில் வட கொரியா தெரிவித்தது.

தென் கொரியா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தை

அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான மோதலைத் தடுக்கும் வகையில், ராணுவ வாரியங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தென் கொரியா யோசனை தெரிவித்தது. ஒன்றுக்கு ஒன்று மதிப்பனிக்கும் அடிப்படையில் இரு தரப்பும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, பதற்ற நிலைமையை உருவாக்கும் நடவடிக்கைகளைத் துண்டிக்க வேண்டும் என்று தென் கொரியா தெரிவித்தது.

தென் கொரியா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தை

2015ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் நடைபெற்ற இரு நாட்டுத் துணை அமைச்சர் நிலை பேச்சுவார்த்தைக்கு பிறகு, அரசாங்கங்களிடையிலான பேச்சுவார்த்தையை இரு தரப்பும் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

தென் கொரியா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தை


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்