தென்கொரியா-வடகொரியா இடையே பல உடன்பாடுகள்

மதியழகன் 2018-01-10 10:18:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென்கொரியா-வடகொரியா இடையே பல உடன்பாடுகள்

தென்கொரியா-வடகொரியா இடையே பல உடன்பாடுகள்

தென்கொரியாவும் வடகொரியாவும் செவ்வாய்கிழமை பன்முன்ஜும் பகுதியில் நடத்திய உயர் நிலை பேச்சுவார்த்தையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பது, இரு தரப்பு ராணுவப் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்டவை பற்றி உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.9ஆம் நாளிரவு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகு வெளியான கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் பியுங்சாங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க, வடகொரியா தனது உயர் நிலை பிரதிநிதிக் குழுவையும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் பிரதிநிதிக் குழுவையும் அனுப்பும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில், தற்போதைய ராணுவ பதற்றத்தை தணிப்பதில் உடன்பட்டுள்ளதோடு, ராணுவ துறைப் பேச்சுவார்த்தை நடத்தவும் இரு நாடுகளும் முடிவு எடுத்துள்ளன.

மேலும், இரு நாடுகளுக்கிடையே பல துறைகளிலான தொடர்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, தேசிய இனத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நனவாக்குவதாகவும், இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்