லான்சாங்-மேக்கொங் ஒத்துழைப்புக்கான 2ஆவது கூட்டம்

பூங்கோதை 2018-01-11 10:26:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லான் சாங்-மே கொங் ஆற்றின் ஒத்துழைப்புக்கான 2வது தலைவர்கள் கூட்டத்தில் லீ கெச்சியாங் பங்கேற்பு

கம்போடியாவின் ஃப்னோம் பென் நகரில் நடைபெற்ற லான்சாங்-மேக்கொங் ஆற்றின் ஒத்துழைப்புக்கான 2வது தலைவர்கள் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் ஜனவரி 10ஆம் நாள் கலந்து கொண்டார். கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்களும், மியன்மார் துணை அரசுத் தலைவரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

லீ கெச்சியாங் பேசுகையில்,லான்சாங்-மேக்கொங் ஆற்றின் ஒத்துழைப்பு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுமானத்தின் முக்கிய மேடையாகும். கடந்த 2 ஆண்டுகளாக, இது மாபெரும் சாதனைகளைப் பெற்று, இப்பிரதேசத்தின் மிக அதிகமான உயிராற்றல் மற்றும் பயன் கொண்ட ஒத்துழைப்பு அமைப்பு முறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. மேக்கொங் ஆற்றின் நெடுகிலுள்ள நாடுகளுடன் இணைந்து, லான்சாங்-மேக்கொங் ஆற்றுப்பள்ளத்தாக்கு பொருளாதார வளர்ச்சி மண்டலத்தையும், தொடர்புடைய நாடுகளின் பொது சமூகத்தையும் உருவாக்க சீனா விரும்புவதாக கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்