சீன-கம்போடியத் தலைவர்களின் சந்திப்பு

பூங்கோதை 2018-01-12 10:22:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-கம்போடியத் தலைவர்களின் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், கம்போடியத் தலைமையமைச்சர் சாம்டெக் ஹன் செனுடன் உள்ளூர் நேரப்படி ஜனவரி 11ஆம் நாள் ஃப்னோம் பென் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, சீன-கம்போடிய நெடுநோக்கு பொது சமூகத்தை உருவாக்கச் சீனா விரும்புகிறது. மேலும், கம்போடியாவுடன் இணைந்து லான் சாங்-மே கொங் ஆற்றின் ஒத்துழைப்பு அமைப்பு முறை, சீன-ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு கட்டுக்கோப்பு ஆகியவற்றின்படி ஒருங்கிணைப்பு மற்றும் பரிமாற்றத்தை நெருக்கமாக்கி, பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்குத் தொடர்ந்து பங்காற்ற சீனா விரும்புவதாகவும் லீ கெச்சியாங் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தகம், சுகாதாரம், வனத்தொழில், வேளாண்மை, மானிடப் பண்பாட்டியல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான 19 ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்தனர். சீன-கம்போடியக் கூட்டறிக்கையை இரு தரப்பும் வெளியிட்டுள்ளன.

சீன-கம்போடியத் தலைவர்களின் சந்திப்பு

அதே நாள், லீ கெச்சியாங், கம்போடிய மன்னர் நோனோடோம் மோனிநேதையும் சந்தித்துரையாடினார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்