கொரிய தீபகற்ப பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

பூங்கோதை 2018-02-10 15:07:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரிய தீபகற்ப பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அழைப்பை ஏற்று, அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினருமான ஹான்செங், தென் கொரிய அரசுத் தலைவர் முன் ஜெய்யினை பிப்ரவரி 8ஆம் நாள் பிற்பகல், சந்தித்துரையாடினார்.

ஹான்செங் பேசுகையில், அண்மைக் காலமாக, கொரிய தீபகற்ப சூழ்நிலை தணிவுப்படுத்தப்பட்டு வருகிறது. பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தென் கொரியாவும் வட கொரியாவும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, இரு நாட்டுறவின் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. இரு தரப்பின் நல்லிணக்கத்துக்குச் சீனா ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அரசியல் வழிமுறையின் மூலம், கொரிய தீபகற்ப பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்