வட-தென் கொரிய ஜஸ் ஹாக்கி வீராங்கனை குழுவின் முதலாவது போட்டி

பூங்கோதை 2018-02-11 17:09:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட-தென் கொரிய ஜஸ் ஹாக்கி வீராங்கனை குழுவின் முதலாவது போட்டி

பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஐஸ் ஹாக்கி போட்டி பிப்ரவரி 10ஆம் நாள் துவங்கியது. இதில் வட-தென் கொரிய ஜஸ் ஹாக்கி வீராங்கனை குழு இணைந்து ஒரே அணியாகக் கலந்து கொண்டது. அவர்கள் ஸ்விட்சர்லாந்து குழுவால் தோற்கடிக்கப்பட்ட போதிலும், மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

வட-தென் கொரிய ஜஸ் ஹாக்கி வீராங்கனை குழுவின் முதலாவது போட்டி

வரலாற்றில் வட-தென் கொரிய வீரர்கள் இணைந்து ஒரே அணியாகக் கலந்து கொள்ளும் முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இதுவாகும். இந்நிலையில், இந்தக் குழுவின் முதலாவது போட்டி, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், தென் கொரிய அரசுத் தலைவர் முன் ஜெய்யின், வட கொரிய உச்ச மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் கிம் யொங்நாம் ஆகியோர் இப்போட்டியைக் கண்டுகளித்தனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்