சீனாவின் வளர்ச்சி மீது பிரிட்டன் செய்தி ஊடகங்கள் கவனம்

வாணி 2018-03-04 15:44:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் நடைபெற்று வரும் இரு கூட்டத் தொடர்களின் மீது பிரிட்டன் செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

சீனா உலகில் மிகப் பெரிய ஏற்றுமதி நாடாகும். சீனாவின் ஏற்றுமதித் தொகை உலகளவில் 13 விழுக்காட்டுக்கு அதிகமாகும் என்று தி இக்கனாமிஸ்ட் இதழ் வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அரசு வாரியங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது இவ்வாண்டு சீனாவின் இரு கூட்டத் தொடர்களில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று பிபிசி தனது இணையத்தில் தெரிவித்திருந்தது.

பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி, நிதித் துறை அபாயங்கள் ஏற்படாமல் தவிர்த்தல், மக்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது முதலியவை இவ்வாண்டின் கூட்டத் தொடர்களில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்படும் அம்சங்கள் என்று ராய்டஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்