வட கொரிய அரசுத் தலைவர் தென் கொரியச் சிறப்புப் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை

2018-03-06 10:29:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜொங் உன் 5ஆம் நாள், அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரியச் சிறப்புப் பிரதிநிதிக் குழுவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளின் உச்ச நிலை தலைவர்கள் பேச்சுவார்த்தை குறித்த தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜெ இன்னின் கருத்துக்களை இச்சிறப்புப் பிரதிநிதிக் குழு கிம் யொங் உன்னுக்குத் தெரிவித்தது. ஒப்படைத்துள்ளது. இது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, மன நிறைவு தரும் ஒத்த கருத்துக்களையும் இரு தரப்பினரும் எட்டியுள்ளதாக வட கொரிய மத்திய செய்திஊடகம் 6ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தொடர்புடைய வாரியங்கள் வெகுவிரைவில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிம் ஜொங் உன் வேண்டுகோள் விடுத்தார் என்றும், இப்பேச்சுவார்த்தையின் போது, தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜெ இன் கைப்பட எழுதிய கடிதத்தை, சிறப்பு குழுவின் தலைவரும், தென் கொரிய அரசு மாளிகையின் தேசியப் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவருமான ச்சுங் யி யொங் கிம் ஜொங் உன்னிடம் ஒப்படைத்தார் என்றும் தெரிய வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்