மகளிருக்கு அதிகாரம் வழங்குவது:ஐ.நா

வாணி 2018-03-08 17:26:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்ச் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாகும். இதனை முன்னிட்டு, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உரை நிகழ்த்துகையில், பாலின சமத்துவமின்மை, மகளிர் மீதான பாகுபாடு ஆகியவை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். மேலும், 2030 ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில் மகளிருக்கு அதிகாரம் வழங்குவது ஒரு மையப் பகுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது உலகளவில், 100 கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு குடும்ப பாலியல் வன்முறையிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதைத் தவிரவும், வேலை வாய்ப்பு, வருமானம் முதலிய துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமமின்மை நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா மகளிருடன் இணைந்து அவர்கள் எதிர்நோக்கும் நியாயமற்ற நிலைமைகளை ஒழிக்க வேண்டும் என்று குட்டரஸ் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்