கிம் ஜொங் உன் மற்றும் சீனக் கலைக் குழுத் தலைவர் சந்திப்பு

தேன்மொழி 2018-04-16 09:21:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிம் ஜொங் உன் மற்றும் சீனக் கலைக் குழுத் தலைவர் சந்திப்பு

கிம் ஜொங் உன் மற்றும் சீனக் கலைக் குழுத் தலைவர் சந்திப்பு

வட கொரிய தொழிலாளர் கட்சித் தலைவர் கிம் ஜொங் உன், பியொங்யாங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்பு துறை அமைச்சரும் சீனக் கலைக் குழுத் தலைவருமான சொங் டாவைச் சந்தித்துரையாடினார்.

சொங் டாவ் தலைமையிலான சீனக் கலைக் குழு, வட கொரியாவில் நடைபெற்ற “ஏப்ரல் மாத வசந்தகாலம்”எனும் சர்வதேச நட்புக் கலை விழாவில் கலந்துகொண்டது.

இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து, இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர். சொங் டாவ் சந்திப்பின்போது கூறுகையில், வட கொரியாவுடன் இணைந்து, புதிய காலத்தில் சீனா மற்றும் வட கொரிய உறவின் வளர்ச்சிக்கும், தீபகற்ப அமைதிக்கும் பங்காற்ற சீனா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்