16ஆவது மலேசியப் பாதுகாப்புக் கண்காட்சியில் சீனப் பங்கெடுப்பு

இலக்கியா 2018-04-16 10:56:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

16ஆவது மலேசியப் பாதுகாப்புக் கண்காட்சி 16ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் துவங்கியது. இதில் கலந்து கொண்ட சீனா, சுமார் 400 சதுர மீட்டர் பரப்பில் தரை, கடல் மற்றும் விமானப் படைகளின் சாதனங்களைக் காட்சிக்கு வைத்து வருகிறது.

மலேசியப் பாதுகாப்புக் கண்காட்சி, உலகின் மிகப் பெரிய பாதுகாப்புக் கண்காட்சிகளில் ஒன்றாகும். கடல், தரை மற்றும் விமானப் பாதுகாப்பு படைகளின் மின்னணு யுத்தத் தொழில் நுட்பம், கடினப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர, போர்க்கால மருத்துவம், தேசியப் பாதுகாப்பு, மனிதநேய மீட்பு, பேரழிவுக்கான மீட்புதவி முதலிய துறைகளில் உலகில் முன்னேறிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்