பென் வார்டன் சீன-அமெரிக்க உச்சி மாநாடு

தேன்மொழி 2018-04-16 16:22:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பென் வார்டன் சீன-அமெரிக்க உச்சி மாநாடு

பென் வார்டன் சீன-அமெரிக்க உச்சி மாநாடு

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பென் வார்டன் சீன-அமெரிக்க உச்சி மாநாடு ஏப்ரல் 15-ஆம் நாள் நிறைவடைந்தது. 3 நாட்கள் நீடித்த இவ்வுச்சி மாநாட்டில், சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். சீன-அமெரிக்க உறவு, தொழில் நுட்ப்ப் புத்தாகம், முதலீடு மற்றும் சுய தொழில் ஆகிய அம்சங்களுடன் தொடர்புடைய கிளை கருத்தரங்குகள் நடப்பு உச்சி மாநாட்டில் இடம்பெற்றன. அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் டியன் கை நிறைவு விழாவில் உரைநிகழ்த்தியபோது, சீனா, 40 ஆண்டுகளுக்கு முன், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைத் துவங்கியது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவும் இயல்பாகத் துவங்கியது. இரு நாடுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், சரியான தேர்வுகளை எடுத்தன. இதன் விளைவாக, இரு நாட்டு மக்களும் உண்மையான நலன்களைப் பெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டு, சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவாகும். சீனாவும் அமெரிக்காவும் புதிய தேர்வுகளுக்கான தருணத்தை மீண்டும் எதிர்நோக்குகின்றன. இது பற்றி சுய் டியன் கை கூறியதாவது, சீனாவின் தேர்வு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்றார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, சீரான, தொடரவல்ல மற்றும் வலிமை மிக்க உறவை அமைக்க வேண்டுமென சீனா விரும்புவதாகவும், பெரிய நாடுகளுக்கிடையேயான இப்புதிய ரக உறவினைப், பரஸ்பர நம்பிக்கை, மோதல் தடுப்பு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய அடிப்படையில் வளர்க்க வேண்டுமென சுய் டியன் கை தெரிவித்தார்.

தவிரவும், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள், சீனாவின் வளர்ச்சியிலிருந்து மாபெரும் நலன்களைப் பெற்று வருகின்றன. 2001 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2 மடங்காகி இருக்கிறது. இதனால், அமெரிக்கச் சமூகத்தின் மொத்த செல்வம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது, அமெரிக்காவின் உள் நாட்டில் குறிப்பிட்ட அளவிலான மக்களின் வாழ்வு நிலை இறக்கம் கண்டுள்ளது. இது, அமெரிக்காவின் உள் நாட்டு நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகும். தற்போது, அமெரிக்காவில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய செயல்திறன் மற்றும் ஆர்வும் குறைவாகக் காணப்படுகிறது. இதனால், அது வெளிநாட்டில் தனக்கான பலியாட்டினைத் தேடத் துவங்கியுள்ளது என்று சுய் டியன் கை குறிப்பிட்டார்.

இதனிடையில், சீன மற்றும் அமெரிக்காவின் இளைஞர்கள் தற்போதைய உலக ஓட்டம் குறித்து தெளிவாக புரிந்து கொண்டால், தங்களது நாட்டின் வளர்ச்சி, இரு நாட்டு உறவின் வளர்ச்சி ஆகிய கடமைகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று சுய் டியன் கை நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்