சீன-ஜப்பானிய 4வது உயர் நிலை பொருளாதாரப் பேச்சுவார்த்தை

பூங்கோதை 2018-04-16 18:55:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஜப்பானிய 4வது உயர் நிலை பொருளாதாரப் பேச்சுவார்த்தை

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் கௌனோ தரௌ ஆகியோர், ஏப்ரல் 16ஆம் நாள் டோக்கியோவில் 4வது சீன-ஜப்பானிய  உயர் நிலை பொருளாதாரப் பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினார்.

வாங்யீ பேசுகையில், சீன-ஜப்பானிய உறவு மேம்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில், இரு நாட்டு உயர் நிலை பொருளாதாரப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளது. நெடுநோக்கு மற்றும் நடைமுறை கோணத்திலிருந்து, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்றார் அவர்.

சீன-ஜப்பானிய 4வது உயர் நிலை பொருளாதாரப் பேச்சுவார்த்தை

கௌனோ தரௌ கூறுகையில், ஜப்பானிய-சீனப் பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாட்டுறவின் முக்கிய அடிப்படை மற்றும் இயக்காற்றலாகும். இரு நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் புதிய சூழ்நிலையில், சீனாவுடன் புதிய கோணத்திலிருந்து இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் திட்டங்களை வகுக்க ஜப்பான் விரும்புகிறது என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்