ஈரானின் ராணுவ வசதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல்

வாணி 2018-05-11 13:15:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிரியாவிலுள்ள ஈரானின் பல ராணுவ வசதிகளின் மீது இஸ்ரேல் தேசியத் பாதுகாப்புப் படை தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேல் ராணுவம் 10ஆம் நாள் கூறியுள்ளது.

அண்மையில் சிரியாவிலிருந்து இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள கோலன் குன்றின் மீது ஈரான் சுமார் 20 ஏவுகணைகளை வீசியது. அதற்குப் பதிலாக உளவு நிறுவனம், ஆயுதக் கிடங்கு, வான் தாக்குதல் எதிர்ப்புப்படை, ராடார் அமைப்பு உள்ளிட்ட சிரியாவிலுள்ள ஈரானின் அனைத்து ராணுவ வசதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதுவரையிலும் இது பற்றி ஈரான் அதிகார வட்டாரம் கருத்து எதையும் வெளியிடவில்லை.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்