சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

பூங்கோதை 2018-05-14 10:34:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரிஃபுடன் மே 13ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

வாங்யீ பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவில் கூட்டாக பங்கெடுத்த முக்கியக் கூட்டாளியாக ஈரான் திகழ்கிறது என்று சீனா கருதுகின்றது. இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கியுள்ள முக்கிய பொதுக் கருத்துக்களை ஈரானுடன் பன்முகங்களிலும் செயல்படுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளைப் பேணிக்காக்க சீனா விரும்புகிறது. மேலும், பலதரப்புவாதத்தை சீனா உறுதியாகப் பேணிக்காத்து, ஈரான் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் தொடர்புகளை நிலைநிறுத்தி, ஈரான் அணு ஆற்றலுக்கான பன்முக உடன்படிக்கையை தொடர்ந்து பேணிக்காக்க சீனா விரும்புகின்றது என்றார் அவர்.

ஈரான் அணு ஆற்றலுக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய சீனாவின் நிலைப்பாட்டுக்கு முகமது ஜவாத் ஸரிஃப் பாராட்டு தெரிவித்தார். இவ்வுடன்படிக்கைக்கு ஆதரவு அளிக்கும் பல்வேறு தரப்புகளுடன் தொடர்புகளை மேற்கொள்ள ஈரான் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்