பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் படையுடன் மோதல்

பூங்கோதை 2018-05-15 10:06:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் படையுடன் மோதல்

இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் மே 14ஆம் நாள் ஜெருசலேம் நகரில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் ஜோன் சுல்லிவன், பிரிதிநிதிக்குழுவுக்குத் தலைமைத் தாங்கி, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேநாள், பாலஸ்தீன மக்கள் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் பேரணி நடத்தினர். அப்போது, இஸ்ரேல் படையுடன் மோதல் ஏற்பட்டது. இம்மோதல் சம்பவத்தில் இதுவரை குறைந்தது 55 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். 2800க்கும் மேலானோர் காயமுற்றனர்.

பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் படையுடன் மோதல்

மேலும், பிரான்ஸ், லெபனான், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளும், அரபு நாடுகள் லீக்கின் அதிகாரிகளும் அதேநாள் அறிக்கைகளை வெளியிட்டு, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் தெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றப்பட்டதற்கு கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்