தென்-வட கொரிய தலைவர்களிடையே 2ஆவது பேச்சுவார்த்தை

வான்மதி 2018-05-27 15:30:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென்-வட கொரிய தலைவர்களிடையே 2ஆவது பேச்சுவார்த்தை

தென் கொரிய அரசுத் தலைவர் முன் ஜே இன், பான்முன்ஜொம் எல்லை பகுதியில் வட கொரியாவைச் சேர்ந்த தொங்கில் இல்லத்தில் அந்நாட்டின் தேசிய அவைத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் உள்ளூர் நேரப்படி 26ஆம் நாள் பிற்பகல் 3 முதல் 5 மணிக்கு வரை பேச்சுவார்த்தை நடத்தினார். பான்முன்ஜொன் அறிக்கையின் நடைமுறையாக்கம், அமெரிக்க-வட கொரிய தலைவர்கள் சந்திப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் மனம் திறந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று தென் கொரிய அரசுத் தலைவர் மாளிகை 26ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

முன் ஜே இன்னும் கிம் ஜொங் உன்னும் பேச்சுவார்த்தை நடத்துவது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் அவர்கள் தென் கொரியாவைச் சேர்ந்த அமைதி இல்லத்தில் முதல் பேச்சுவார்த்தை நடத்தி, பான்முன்ஜொன் அறிக்கையில் கையொப்பமிட்டது நினைவுக்கூரத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்