வட கொரிய-அமெரிக்க சந்திப்பு: தென்-வட கொரிய தலைவர்களின் விருப்பம்

வான்மதி 2018-05-27 15:34:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய-அமெரிக்க சந்திப்பு: தென்-வட கொரிய தலைவர்களின் விருப்பம்

தென் கொரிய அரசுத் தலைவர் முன் ஜே இன் 27ஆம் நாள் அரசுத் தலைவர் மாளிகையில் வட கொரிய தலைவருடனான பேச்சுவார்த்தையை அறிமுகப்படுத்தினார். அமெரிக்க-வட கொரிய தலைவர்கள் சந்திப்பு ஜுன் 12ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என இரு கொரிய நாடுகளும் விரும்புவதாகவும், பான்முன்ஜொன் அறிக்கையை கூடிய விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அரசுத் தலைவருடன் நடத்திய சந்திப்பின் முடிவையும் டிரம்பின் உறுதியான விருப்பத்தையும் கிம் ஜொங் உன்னிடம் முன் ஜே இன் விவரித்தார். அணு ஆயுதமின்மையை வட கொரியா மன உறுதியுடன் முற்றிலும் நிறைவேற்றினால், வட கொரியாவுடன் பகைமை உறவை அமெரிக்கா நிறுத்துவதோடு, அதனுடன் பொருளாதார ஒத்துழைப்பு மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்