இயத ரத்தக்குழய் நோய்க்கு முக்கிய காரணம் புகையிலை பயன்பாடு

வான்மதி 2018-05-31 15:54:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே 31ஆம் நாள் உலக புகையிலை இல்லா தினமாகும். புகையிலை மற்றும் இதய நோய் என்ற தலைப்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், புகையிலையின் பயன்பாட்டுக்கும், பக்க வாதம் உள்ளிட்ட இதய ரத்தக்குழய் நோய்க்கும் முக்கிய தொடர்பு உண்டு. உலகளவில் தொற்றாத நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முக்கிய காணரங்களில் இதுவும் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் புகையிலையின் பயன்பாடு காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் புகையிலையின் பயன்பாட்டினால் இதய ரத்தக்குழய் நோய்வாய்ப்படும் இடர்ப்பாடு அதிகரிக்கும் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது என்று 2000 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான புகை பிடிப்பு போக்கு பற்றிய இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சீனாவின் பொது இடங்களில் புகை பிடிப்புக்கான தடை, தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திட்டத்திலும், 2030 ஆரோக்கிய சீனா என்ற திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், புகையிலை கட்டுப்பாட்டில் சீனா பெற்றுள்ள சாதனை, சீனாவிலுள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்