கொரியத் தீபகற்பப் பிரச்சினை குறித்து ரஷியாவின் வேண்டுகோள்

இலக்கியா 2018-06-01 09:39:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரியத் தீபகற்பப் பிரச்சினை குறித்து ரஷியாவின் வேண்டுகோள்

கொரியத் தீபகற்பப் பிரச்சினைக்கான தீர்வு போக்கைப் பேணிக்காக்கும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனத்துடன் செயல்பட வேண்டுமென்றும், வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு தரப்புகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷியா விரும்புவதாகவும், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜ லாவ்ரோவ் 31ஆம் நாள் பியொங்யாங்கில் தெரிவித்தார்.

வட கொரியாவில் பயணம் மேற்கொண்ட லாவ்ரோவ், வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜுங் உன்னை அன்று சந்தித்துரையாடினார். கொரியத் தீபகற்பம், வட கிழக்காசியா ஆகியவை, அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றைப் பெற்று வளர்ச்சியடைய ரஷியா விருமபுவதாக லாவ்ரோவ் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்