இரும்புருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது உயர் வரி வசூலிப்பு:அமெரிக்கா

வாணி 2018-06-01 10:56:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யும் இரும்புருக்கு மற்றும் அலுமினியத்தின் மீது 25 விழுக்காடு மற்றும் 10 விழுக்காடு சுங்கவரி வசூலிக்கப்படும் என அமெரிக்க வணிக அமைச்சர் வில்பர் ரோஸ் 31ஆம் நாள் தெரிவித்தார். இந்த மூன்று தரப்புகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை அமெரிக்கா தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரும்புருக்கு, அலுமினிய ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது பற்றி அர்ஜென்டீனா, ஆஸ்திலேரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா ஒத்த கருத்தை எட்டியுள்ளதாகவும் ரோஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்