பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு பாடுபட வேண்டும்:வாங்யீ

வான்மதி 2018-06-05 09:31:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு பாடுபட வேண்டும்:வாங்யீ

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜுன் 4ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போது, பிரிக்ஸ் நாடுகளின் பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் ஜோஹன்னெஸ்பர்கில் தலைவர்களின் சந்திப்பு குறித்து உரை நிகழ்த்தினார்.

வேறுபட்ட மேம்பாடுகளுடைய பிரிக்ஸ் நாடுகள் விரல்கள் போன்றவை, இறுகப்பற்றினால் கை முட்டியாக மாறும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டிருந்தார். மாறி வரும் உலக நிலைமையை எதிர்நோக்கி, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி பலதரப்புவாதத்தைப் பின்பற்றி கூட்டு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

5 நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். சர்வதேச நீதி நியாயத்தைப் பேணிக்காக்கும் வகையில் அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். ஒன்றுபட்டு ஒத்துழைக்கும் அடிப்படையை வலுப்படுத்தும் வகையில் மனிதப் பரிமாற்றத்தை விரிவாக்க வேண்டும். மேலும் பிரிக்ஸ் ப்ளஸ் என்ற மாதிரியை ஆதாரமாகக் கொண்டு கூட்டாளிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்