ஜுன் 12ஆம் நாள் காலை 9 மணிக்கு டிரம்ப்-கிம் ஜோங் உன் சந்திப்பு:அமெரிக்கா

மதியழகன் 2018-06-05 09:52:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்பும் வட கொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜோங் உன்னும், சிங்கப்பூரின் நேரப்படி ஜுன் 12ஆம் நாள் காலை 9 மணிக்கு அந்நாட்டில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சரா சாண்டெர்ஸ் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் பணிக் குழு தற்போது சிங்கப்பூரில் திட்டவட்டமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதேசமயம், அமெரிக்க தூதாண்மை அதிகாரிகள் கொண்ட பிரதிநிதிக் குழு, வடகொரிய பிரதிநிதிக் குழுவுடன் கலந்தாய்வு நடத்தி வருவகின்றது. இந்த கலந்தாய்வு சுமுகமாக நடைபெற்று வருதோடு, முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றும் சரா சாண்டெர்ஸ் குறிப்பிட்டார்.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்